Featured

​ரௌத்திரம் பழகு


தாலி கட்டிய மனைவி தாலியின்றி காத்து கிடக்க … வீட்டு அடுப்பில் பூனை உறங்க…

அடுப்பின் உபயோகம் தெரியாமல் குட்டி மழலை அதை சுற்றி விளையாடும் அவலம் கேட்கவில்லை …

அந்த சாக்கடை ஓரமிருந்து செவ்வாய் கிரகம் நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் அந்த குடும்ப தலைவனுக்கு…

ரௌத்திரம் பழகு…காதல் என்பதோர் புனிதச்சொல்…புனிதச்சொல்லில் தொடங்கி..

மாதர்தம் மெய் தொடும் சாவியாய்மாறிபின்…

உயிரையும் மாய்த்து விடும் மரணச்சொல்லில் முடித்தது விதி..

முடித்தது யாரோ இத்துறை வித்தகன்தான்…ஆனால் பழி

பாவம் விதி மேல்……

ரௌத்திரம் பழகு…


பல காரும் போகுதய்யா..பல்லக்கும் போகுதய்யா ..

அங்கே கீழே கிழவன் விழுந்துகிடக்க.. 

வருந்தியதே கூட்டம் 

கிழவனின் வலியை கண்டா?

வழிமாறி போக வேண்டும் என்று..

இனி டேக் டைவர்சன் அல்லவா?

ரௌத்திரம் பழகு…


பொழப்பத்தேடி பாரீனுக்கு போனான் ஒருத்த..

பாக்குறதென்னமோ பத்து டாலர் உத்தியோகந்தா..

ஆனால் பகட்டோ தன் தாயின் மார்பை  சேலை போர்த்தி மறைக்க மறந்தவன்  போல் 

என்  தமிழை நாவினிக்க  உரைக்க மறந்ததென்று பிதற்றும் பாவியின் 

கடவுசீட்டு கசக்க பட வேண்டுமென்று …

ரௌத்திரம் பழகு…


தன் இனத்தை தானே அழித்த வரலாறு மனிதனை தவிர வேறு எந்த மிருகத்திற்கும் இல்லையம்மா

அன்று என் தங்கை கருவறுக்கப்பட்டு கிடக்கையில்

என் தமயருள் ஒருவர் கூட வரவில்லை…

அன்று பழகிக்கொண்டேன் ரௌத்திரத்தை…

பார் போற்றும் பாரதி சொன்ன மனிதனாக வேண்டாம்…

பாதி மனிதனாய் இரு போதும்.. 

                                      கவிஞர்.மகிழ்  

                  

Advertisements

கோடி கொடுத்தாவது…

இராணுவத்துல அழிஞ்சா நாலு இலட்சம்..💰

போராளிய கொன்னு கொடுக்குறாய்ங்க பத்து இலட்சம்..💰💰

இந்த இழப்புகளை உங்கள் இலட்சங்கள் சரி செய்யும் என்றால்..

அத்துனை அரசியல் வியாதிகளுக்கும் சேர்த்து எவ்வளவு என்று சொல்லிவிடுங்கள்..

கோடி கொடுத்தாவது கொத்தோடு சோலியை முடித்துவிடுகிறோம்..😤

ஆம்..அவன் என் மகன்தான்.

தொப்புள்கொடி அறுத்தெறியும் அந்த வேளையில்..

அவன் அருகில் நான் இல்லை..

அரிய பல மொழி பேசி எம்மழலை வளர்கையில்..

அகரம் கற்பிக்க நான் இல்லை..

மண்ணோடு கல்லும் சேர்த்து தின்னுகையில் திட்டி அடிக்க நான் இல்லை..

விரல் சுவைத்து வெளிர்க்கையில் வேப்பெண்ணை கூட தடவவில்லை..

மூக்கின் வழி அழகு அருவி ஒன்று ஓடி வருகையில்.. முந்தானை கொண்டு துடைக்கவும் நான் இல்லை..

ஐந்தில் வளைக்காவிட்டால் வாழ்வு வாட்டியல்லவா எடுத்துவிடும் எம்மகனை..

பதைபதைப்பில்..

“நேர்மையும் உழைப்புமே உன்னை உச்சிக்கு கொண்டு செல்லும்” என

உபதேசித்து உச்சிமுத்தமும் இட வில்லை…

அன்றொருநாள் ..

அக்கா என்ற உறவாய் நீ இரு என்றாய்..

அ1 வகுப்பின் ஆறாவது பலகையில் ..

அரங்கேறியது நம் உறவு..

சின்ன சின்ன செய்கைகளிலும் என் சிரிப்பை மட்டும் எதிர்நோக்கி “நீ

நட்பில்லை உறவில்லை ஒண்ணுவிட்ட அத்தை மகன் கூட இல்லை..

இந்த உணர்வின் உறவெது என்ற வியப்பில் “நான்

உடல் கிழித்து உதிரம் அளந்து பாசம் கணக்கிட்ட நாட்கள் அவை..

சில நாட்கள் போன் பேசி ..

பல நாட்கள் போரும் பேசியது.. நம்வாழ்வில்..

நல்ல பல சொந்தங்கள் வந்தும் இருந்தும் நகர்ந்தும் வாழ்க்கை கற்பித்தது..

கற்பித்த பாடமது மனதில் பதிந்தேபோக..

உலகின் உட்பொருள் அறிந்து ஒன்றும் பேசா கல்லாய் மாறிய நான்..

மழலையாய் மறைவின்றி காயம்மறந்து “உண்மை“யில் களித்து அவ்வபோது உயிர் பிறக்கிறேன்…உன்னிடம்..

உலர்ந்து போன உயிரையும் உன்னத அன்பில் திளைக்க வைத்த உன்னை ஒருத்தி ஏய்த்தே செல்ல..

எல்லா பொறுப்பையும் மீறி பெரும் கடமை தோள்களின் மேலே.. “இருபது வயது பிள்ளைக்கு தாயாய் நான்”

இனியும் இவன் வாழ்வில்.. நாணளவு துன்பமோ..நூலளவு ஏமாற்றமோ..

என்னை மீறித்தான் துளைத்துவிடமுடியும்.. நிதர்சனந்தான்..

முந்நூறு நாட்கள் மூலகருவினில் வைத்து உருவாக்கவில்லை.. செந்நீர் கரைத்து அமிர்தமாக்கி பாலூட்டவும் இல்லை..

ஆனால்..

வாழ்வின் உயரம் நோக்கி துயரம் போக்கி சிகரம் தொட.. அயரா ஏணியாய்..என்றும் “நான்தான்

ஆம் ..அவன் என் மகன்தான்.

கவிஞர்.மகிழ் ( ‘முதன் முதலாய்’ என் கவிநடை மாற்றி..அரசியல்தாண்டி அன்பிற்காக ஒரு படைப்பு)

மூன்றாம் உலகப்போர்…

முதலும் இரண்டும் வரலாறாய் போக
மூன்றாவதாக வேண்டும் ஒரு போர்

லஞ்சத்திற்கிங்கில்லை பஞ்சம்..
வரும் வஞ்சத்தை யெல்லாம்..
ஊதி தள்ளும் நெஞ்சம் படைத்தவன் இப்படைவீரன்..
ஊதத்தான் உபயோகிக்கிறான் உத்தியோகம் என்னும் ஊதுகுழலை..
பொறிகூடி எரிந்தது என்னவோ
ஏதுமறியா மாக்களின் இரைப்பைதான்..
இவனே ஊழல்தேர் படைவீரன்..

படைதளபதியாய்..

தாரைதப்பட்டைகள் முழங்க..
நல்லதொரு சன்னல் வண்டியிலே..
ஊர்சுற்றி..
கைகூப்பி..
மண்டியிட்டு..
காசும் கூடக்கொடுத்து..
வாங்கிவிட்டார்..
ஐந்து வருட குத்தகை..
*(பின்குறிப்பு..நான் அம்மாவின் செல்லபிள்ளையோ..

ஐயாவின் அன்புபிள்ளையோ இல்லை..

சன்னல் வழியே பார்த்து..ஒத்திக்கு எடுத்த ஊரின்
சன்னலின் விளிம்பில் பட்டுவிடாமல் விலாசமற்று போன தெருவோர பட்டுபிள்ளை..)*

படைதளபதியின் உறுதி மொழியாய்..
கான்ராக்டை பிடிக்க காசல்லவா கொடுத்தேன்..
அதை பிழிந்து எடுத்து விட்டுதான் செல்வேன்..
அது ..
ஏழையின் குருதியிலிருந்தாலும் சரி..
ஏழு நட்சத்திர ஓட்டலின் விர்ஜின் மேரியில் இருந்தாலும் சரி..

பலே..தளபதி..பணிவான வணக்கங்கள்..

எதிர்படையில்..

“மந்திரிக்கு தலைவலி மதிய உணவு உண்ணவில்லை” மாலைமுரசின் தலைப்பு செய்தியை..
டீக்கடை கடன்பன்னோடு எழுத்துக்கூட்டிக் கொண்டிருக்கும் ..
என் அப்பா ஏழை விவசாயி..

இந்த படையையும் மீறி..
இவனது பசி செயிக்குமானால்..
மூண்டுவிடட்டும் மூன்றாம் உலகபோர்..

– கவிஞர் . மகிழ்

நல்லவன் கூட்டத்த நல்லா புரிஞ்சுக்க அரசியல் பழகு

தமிழர் நம்மை தட்டி கழிக்கும்..

கைவிட்டு பிழைக்கும்..

அரசியல் அரக்கர்கள் உலாவும் இந்த

அழுகிய நாட்டில்

அரசியல் பழகுடா தமிழா..

உன்னோட சந்ததிய

சக்சஸா வளர்க்க..

சாவகாசமா திழைக்க…

என்னோட பிள்ளையின் உழைப்புதா கேக்குதா..

சோறு போடும் ஆளு அங்க சோந்துபோய் கிடக்குறா..

சோத்துக்கே வழியின்றி தூக்குலயும் தொங்குறா..

அப்ப கூட சும்மாவா விட்டீங்க நீங்க..

புதச்ச சவத்தில

இல்லா குருதிய

குழல் போட்டு உறிஞ்சித்தா குடிக்கிறமாதிரி..

எத்தன டன்னுதான்டா எடுப்பீங்க தண்ணீரு..

(இப்ப மீத்தேன்னு)

கண்ணுல மட்டும் இல்ல..

ஏழ கண்ணுல மட்டும் இல்ல..

உழவன் கண்ணுல மட்டும் இல்ல..

நெஞ்சுலயும் வழியுது கண்ணீரு..

ஊருக்கே ஊட்டிவிட்டு பாத்து பாத்து ரசிச்சவன்..

ஒருபிடி சோத்துக்கு ..

ஒடுங்கி கிடப்பது சாபமா??

சோர்ந்தவன் சோகத்த போக்கிடதானடா..

தேர்தலில் போட்டியும் போட்ட..

வெள்ள சொக்காவில் வந்து ஓட்டும் கேட்ட..

தோழா..

கர்ம வீரனையும் கட்டபொம்மனையும்

கண்ட அந்த நாக்காலி..

நாக்கிருந்தா திட்டிபுடும்..

நாணி குனிஞ்சு

நாலு காலையும் வெட்டிகிரும்..

நல்லவன் நீ அங்க

அமருரது தெரிஞ்சா..

அமரர் ஊர்தியில இடங்கேட்டு அழுகும்..

நாக்கில்லா நாக்காலி அமைதியா இருந்தா..

அர்த்தமிருக்குதடா தோழா..

நாலு எழுத்து படிச்ச நீயும்

நாடு கடந்து போயிட்டா..

வல்லரசு ஆகும்முன்னு..

நல்லரசு ஆகும்முன்னு..

வாழ்க்கையே தேசமுன்னு..

வாழ்ந்த அப்துல் அய்யா கனவுங்கூட..

ஊரு கடந்து..

நாடு கடந்து..

நாளும் கடந்து போயிரும் பாத்துக்க..

தலைவர் தளபதின்னு ஆரம்பிச்ச பிரச்சன..

சின்னம்மா பெரியம்மான்னு செஞ்சதுடா அர்ச்சன..

உரிமைய உரிமையா கேட்டு நின்ன உன்னத்தா..

அந்த நல்லவன் கூட்டம் ..

உன்ன

அந்த நல்லவன் கூட்டம் ..உன்ன

நாவு கூசாம..

நக்சலைட்டுன்னு சொன்னப்போ..

நரம்பு துடிச்சதடா..

நாடகம் புரியலடா..அரசியல் நாடகம் புரியலடா..

தமிழா தண்ணிக்கு கையேந்தி

அடுத்த ஸ்டேட்டுல

வேலைக்கு கையேந்தி

அடுத்த நாட்டுல..

இனி உயிருக்கும் மானத்திற்கும்..

அடுத்த கிரகம் தேடி போகுற நிலமையும் வரலாம்..

ரெடியா இருடா..

பெட்டி படுக்கைய எடுடா..

இந்த உதவா ஆட்டு கூட்டத்திற்கு உழச்சதிற்கு பதிலா..

இஸ்ரோ(ISRO)விற்கு நாலு காசு கொடுத்து வச்சு..

கிரகம் ஒண்ணு பாக்கச்சொல்லு..இந்த கெரகங்கள் இல்லா- நல்ல கிரகம் ஒண்ணு பாக்க சொல்லு..

எல்லாம் தெரிஞ்சும்

எச்ச பணத்திற்காக..

ஒட்டல் சுகத்திற்காக..

எங்கள் அவுங்க வாழ்க ..

எங்கள் இவுங்க வாழ்க ன்னு ..

சால்ரா கொட்டுற ஆசாமிங்க கேளுங்க..

உங்க பேத்தி பேரன் உன்ன மதிக்காது பாருங்க..

குடும்ப அரசியல்

சொத்துகுவிப்பு அரசியல்

ரவுடி கும்பல் அரசியல்

பொம்மலாட்ட அரசியல்

சவுண்டு அரசியல்

சாதி அரசியல்

சுற்றி திரியும் அரசியல்

டிசூம் டிசூம் அரசியல்

அட துடப்ப அரசியல்

இந்த அரசியல்கட்சிகள்-உன்ன காட்சி பொருள் ஆக்கலாம்..

ஒன்னும் பேசா

ஊம பொம்மையா

மாத்தலாம்..

விழித்துக்கொள் தோழா..

கரைபடியா வேட்டிக்கு பின்னே..

புதஞ்சுருக்கும் முகத்த தேடுடா..

கீறிபிழ..

அடையாளம் காண்..

உன் அறியாமை உடைத்தெறி தோழா..

அரசியல் சாக்கடை நாற்றம் நிறைந்ததென ..

விலகி விலகி ..புகழ்

அழுகி அழுகி..

நாட்டையே சாக்கடை ஆக்கும் நிலமையில ..

அடங்கிதான் கிடக்குறோம்..

கேள்வி கேட்கவும் மறுக்குறோம்..

ஜிஎஸ்டி

எண்ணூரு

மித்தேன்னு

மணல் கொள்ள

பண கொள்ள

பெப்ஸி

கோலா

என்னப்பன் விவசாயி தற்கொலை

நீங்க செய்யும் படுகொலை..

இன்னும் நூறு இருக்கு பேச..

இன்னும் நூறு இருக்கு பேச..

பேசுவதோடு அல்ல..உங்களமாதிரி

பேசுவதோடு அல்ல..

நல்லவன் கூட்டத்துக்கும் நமக்கும் நல்ல வித்தியாசம் வேணுமில்ல..

அரசியல் பழகுடா தோழா..

அதுக்காச்சும்

அரசியல் பழகுடா தோழா..

கவிஞர் . மகிழ்

கொரியாவின் முதல்ராணி -ஓர் தமிழச்சி

Heo hwang ok’s tomb

ஆம்..அந்த அரசியின் பெயர் ஹியோ ஹுவாங் ஒக் . அவர் பாண்டியநாட்டு இளவரசி..என்று பெருமிதத்துடன் ஒருவர் சொல்லி கொண்டிருக்க..அதிபுத்திசாலி ஒருவர் “இப்படி கொசகொச என்று தமிழர் பெயர் எப்படி மாறிருக்கமுடியும்..அத்தனையும் பேக் நியூஸ்பா(fakenews)”  என்றும் “அந்த அரசிக்கு வடநாட்டுலதா கோவில் இருக்குன்னு கூட கேள்விவிப்பட்டுருக்கேன்..எதுனாலும் தமிழ் தமிழ்ன்னு போர்டு வச்சரது”என்று (தமிழிலேயே )சலித்து கொண்டு சென்றார் மற்றொருவர்.
      அவரை போன்ற சிலருக்கும் … உண்மையில் தமிழர் தரணியை ஆண்ட பெருமை குறித்து அறிய விரும்பும் தமிழ் நெஞ்சங்களுக்குமான பதிவு.

          கொரியாவில் பண்டைய கயா (Gaya) பேரரசின் முதல் ராணி இந்தியாவிலிருந்தே அங்கு குடியேறினார் என்று அங்குள்ள வரலாற்று குறிப்புகள் கூறுகின்றது. அதன்படி கொரிய நாட்டின் கிம் இன மக்கள் தங்கள் வம்சத்தின் தாயாகக் கருதும் பெண்ணரசியை வணங்க இந்தியாவிற்கு வருடாவருடம் யாத்திரை மேற்கொள்கின்றனர். 

       அவருக்கு இந்திய-கொரிய தூதரங்களால் அயோத்தியாவில் மணிமண்டபம்  ஒன்று கட்டடப்பட்டுள்ளது.ஹியோ வின் தாய்தேசம் அயோத்தியா என்பது போல சித்தரித்து முறையான ஆராய்ச்சி ஏதும் இல்லாமல் அங்கு மணிமண்டபத்தை கட்டிவிட்டதோடு நில்லாமல் அதனை சர்வதேச கலை சின்னமாக அறிவிக்கவும் அம்மாநில அரசு முயற்சித்து கொண்டிருக்கிறது.

                   கிபி 13 ஆம் நூற்றாண்டில் இல்யோன் என்கிற புத்த துறவி கொரியதேச வரலாற்றையும் புனை சரித்திரங்களையும் தொகுத்து படைத்த வரலாற்றில் தான் இந்த அரசியை குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளளது.

குறிப்புகள்:

    ௧] கிபி முதலாம் நூற்றாண்டில் கொரியாவின் முதல் பகுதியை சுரோ என்ற அரசன் ஆண்டு வந்தான்.

      ௨] அந்த அரசனுக்கு திருமண வயது வந்த போதிலும் தன் திருமணம் இறைவனால் சொர்க்கத்தில் நிச்சியிக்க படவேண்டும் என்று கூறி நாட்கள் கழிந்தன.

       ௩] சில காலங்கள் சென்றபின் அருகிலுள்ள தீவு ஒன்றில் (தற்போதைய தென்கொகொரியாவில் )மிகப்பெரிய சிவப்பு கப்பல் ஒன்று அயல் தேசத்திலிருந்து ஒரு இளவரசி ,இரண்டு கணவன் மனைவியர் ,சில பாதுகாவலர்கள் மற்றும் தங்கம், பட்டு ,பகோடா கற்கள் போன்றவற்றை சுமந்து கொண்டு வந்தது.

          ௪] அந்த 16 வயதான எழில் மிகு அரசி தான் கடல்கடந்து வாழும் இளவரசனை மணம் முடிப்பது போல் கனா கண்டதாகவும் அதற்காகவே பயணம் மேற்கொண்டதாகவும் கூற தானும்  இப்படி ஒன்று நடக்க போவதை முன்னரே உணர்ந்திருந்தாக கூறி இளவரசியை மணம் முடிக்கிறார்.

             ௫] பின் நாட்டின் முதல் அரசியாக திகழ்ந்தார் என்றும் அவருக்கு பத்து ஆண் குழந்தைகள் என்றும் நீளுகிறது வரலாறு.

              ௬] அவர் தன் தாய் தேசமாக குறிப்பிட்டது அயுத்தா என்ற பெயர்கொண்ட தேசம்

அரசியின் பிறப்பிடம் அயோத்தியா என மக்கள் நம்ப காரணங்கள்:

           ௧] கிபி 13 ஆம் நூற்றாண்டில்தான் கொரியாவின் வரலாறு சீன சப்பானிய மொழியிலிருந்து கொரிய மொழிக்கு மாற்றப்பட்டது.அதன்பின் மார்க்கபோலோவின் ஆவணங்களால் 14 ஆம் நூற்றாண்டில் மேலைநாடுகள் கொரியாவை பற்றி அறிந்திருந்த போதிலும் 18 ஆம் நூற்றாண்டில்தான் வெளியுலகம் கொரியா குறித்து தெரிய வந்தது.

         உ) தங்களின் வேரைத்தேடி வரலாற்றை திருப்பிய கொரிய மக்கள் அயுத்தா என்று தேடதுவங்கினர். 

          ௩) அரசியார் அதனை எப்படிச்சொன்னார் அதனை அவர்கள் எப்படி புரிந்து கொண்டனர் என்பதும் அந்த வரலாறுகள் சீன மொழியில் எழுதப்பட்டது என்பதையும் கவனிக்க வேண்டும். அங்குதான் சர்ச்சை துவங்குகிறது.

             ௪) அயுத்தா என்ற சொல் வரலாற்றாளர்கள் சிலரால் இந்தியாவின் புராதாண நகரமான அயோத்தியா என்று கணிக்கப்பட்டது.அதனால்தான் அயோத்தியா என ஆகிவிட்டது .ஆனால் இந்திய  சரித்திரத்தில் இவர்பற்றிய குறிப்புகள் எதுவும் இடம் பெற வில்லை.

தமிழ் மரபியலாளர்கள் இவரை பாண்டிய அரசின் கீழ் ஆட்சிபுரிந்த ஆய் நாட்டின் இளவரசி சுட்டி காட்டினார்கள் . 

இதற்கு அவர்கள் அளித்த விளக்கங்கள் கொரிய பாரம்பரியத்தை உற்று நோக்கையில் தெளிவாகிறது.

தமிழ் மரபியலாளர்கள் அளித்த விளக்கம்: 

மொழி : கொரியநாட்டில் இன்றும் தாய்தந்தையரை அம்மா அப்பா என்றுதான் அழைக்கின்றனர்.அதனை தன் தாய்வழி மரபு சொல்லி தந்ததாக கூறுகின்றனர்.அதுபோக புது ,புதிய,புல்வெட்டு,தெரு,நாள் போன்ற சொற்களிலும் அச்சச்சோ,அப்பாடா போன்ற உணர்வுச்சொற்களிலும் கொரிய மொழியில் தமிழாதிக்கம் இன்றும் காணப்படுகிறது.

              மேலும் தமிழ்மொழிக்கும் கொரியமொழிக்கும் உண்டான ஒற்றுமை குறித்து ஒரு பிரெஞ்ச் அறிஞர்தான் ஆராய்ந்து கூறியுள்ளார்.

உணவு: கொரிய நாடு புத்தமத தழுவலுக்குப்பின் மற்ற கிழக்காசிய நாடுகள் போன்ற உணவுப்பழக்கத்தை கொண்டிருந்த போதிலும் அதிலிருந்து சிறிது வேறுபட்டு நெல் அரிசி உணவுகளை பிரதானமாக கொண்டிருந்தது.அது இப்போது  மெல்ல மெல்ல மாறுவதையும் கவனிக்க முடிகிறது.

வாழும் இடம்: அந்த பாண்டிய இளவரசி அங்கு செல்லும் போது அறியாதவர்களுடன் வர மறுத்ததாகவும் தங்களுக்கென குடிசை கட்டி கொண்டதாகவும் தெரிகிறது.

             கொரியாவின் பழமையான வீடு கட்டும் முறைகளில் குடிசை அமைத்து வாழ்வது குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.அதன்பின்தான் நெல்விவசாயம் வளர்ந்ததாக தெரிகிறது.

அயுத்தா குறியீடு: அரசியாரின் சிலையின்கீழ் காணப்படும் எழுத்துக்கள் அயுத்தா என்பதைக் குறிக்கின்றது. ஆனால் அயோத்தியா நகரம் அந்த காலக்கட்டத்தில் சகேதா என்றே அழைக்கப்பட்டது.

கடல் வழிபயணம்: அந்த புத்த துறவி குறிப்பிட்டிருக்கும் ஆண்டு கிபி45 அதாவது சரியாக நம் சங்ககாலம். அப்போது பாண்டியர்கள்  வளமாக வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் எண்ணிலடங்காதவை .

         பாண்டியர்கள் ரோம் ,கிரேக்கம் என கடல் கடந்து வணிகம்செய்ததற்கான ஆதாரங்களாக நம் கடலோரம் கிடைக்கப்பெற்ற ரோமானிய நாணயங்களே போதும்

       முதலில் உத்திரபிரதேசத்தில் இருக்கும் அயோத்தியா ஒரு கடலோர நகரமே இல்லை.ஆனால் தமிழ்சமூகம் ஆமை வலசை பயன்படுத்தி விரைவான கடல் பயணங்களை மேற்கொண்டனர் என்பதும் கிழக்கையும் மேற்கையும் இணைத்ததில் தமிழருக்கு தனி இடம் உண்டு என்பதும் யவராலும் மறுக்க முடியாத ஒன்று.

பெயர்காரணம்: ஆராய்ச்சியாளர்கள் அவளது பெயரை செம்பவளராணி என கருதுகின்றனர்.அரசியின் கொரிய பெயரின் அர்ததமும் அதுதான்.சங்க காலத்தில் பவளதொழிற்சாலைகள் தமிழகத்திலே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது . 

மதம்: கொரியாவில்  4 ஆம் நூற்றாண்டில்தான் புத்தமதம் கோலோங்க தொடங்கியது .ஆனால் தமிழ்ச்சங்க காலத்திலோ பௌத்த மதம் சார்ந்த மடலயங்கள் தமிழக்த்தில் ஏற்கனவே கட்டப்பட்டிருந்தன.புத்தமதம் பரவிய பாதை ஆதலால் சீனர்கள் சகஜமாக இங்கு கடல் வணிகம் செய்துள்ளனர். சீன யாத்ரீகர்களுக்கு தனி விடுதிகள் இருந்திருக்கின்றன.

கற்கள்: இளவரசி கடல்வழி பயணத்தில் தன்னை பாதுகாத்துக்கொள்ள பெரிய அளவிலான கற்களை கொண்டு சென்றுள்ளார். அந்த கற்கள் இன்றும் அரசியின் நினைவிடத்திற்கு அருகில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.அவை பார்ப்பபதற்கு இளவட்ட கற்கள் போல் உள்ளன.அப்படியான வழக்கம் அயோத்தியாவிலோ வேறெந்த கிழக்காசிய நாடுகளிலோ காணப்படுவதில்லை.

இசைக்கருவி: இளவரசி அங்கு செல்லும் போது 12 நரம்புகள் கொண்ட இசை வாத்தியத்தை எடுத்து சென்றுள்ளார். 12 நரம்புகள் கொண்ட இசைவாத்தியம் தமிழ் பண்பாட்டிலேயே இருந்தது. 

         …..இசை , மொழி ,உணர்வு உட்பட பல கலாச்சார ரீதியான தொடர்புகளை தவிர்த்து வெறும் நிறம் மற்றும் இதிகாச நகருக்கான பெயர் இவற்றை வைத்து முறையான ஆய்வின்றி வரலாற்றை திருத்தி எழுத முற்படுவது அனர்த்தம்.நம் வரலாற்றை நம் கண்முன்னரே மாற்றி எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.கொரிய அரசு இதை பற்றி கூறும் போது முறையான ஆராய்ச்சியின்றி தமிழ் பண்பாடும் பண்டைய வரலாறும் மறுக்கப்பட்டுள்ளது.

பின்குறிப்பு: இன்று கிம் இன மக்கள் சுமார் 6 மில்லியன் .அவர்கள் தங்கள் வம்சங்களுக்கு தாயாக கருதப்படுபவள் ஹியோ . அதற்காகவே பல கோடி செலவு செய்து தவறான இடத்தில் மணிமண்டபம் கட்டியுள்ளனர்.

                தற்போது தமிழகத்தில் மத்தியஅரசால் தடைக்குள்ளாகி இருக்கும் எம் முன்னோர்களின் பொக்கிஷ பேழை கீழடி குறித்து சிந்திக்கக்கூட என் தமிழக அரசிற்கு நேரமில்லை . ஏற்கனவே பாதி அழித்தாகிவிட்ட இந்த வரலாறு பற்றி பேசவோ பெருமைபடவோ மீட்டெடுக்கவோ என் அரசிற்கு நேரமும் இல்லை நேர்மையும் இல்லை. அச்சீர்மிகு அரசிற்கு இப்பதிவு சமர்பணம். Source: நா.கண்ணன்,பாலு,நாகராஜன் போன்றோர்களின் பதிவுகளால் தி இந்து வில் வெளிவந்த செய்தி.shantraveller , பித்துகுளி போன்றோரின் பதிவுகள்

பெண் – ஓர் பெண்ணின் பார்வையில்…#நிதர்சனம்

கருவிலிருந்து கல்லறைவரை

ஏதோ அவளை ஒதுக்க..

பூவுக்கு உவமையாய் அவளும்

அவளுக்குவமையாய் பூவும்..

இங்கும் ஓடி வந்து முரண்பேச

பூத்த பின்தான்..

அவள் மென்மை

சோதனைக்குள்ளே

மொத்தத்தில்…

பத்தினி என்னும் வார்த்தைக்குரியவளென
வரையறுக்கப்பட்ட ஜென்மம்

             –கவிஞர்.மகிழ்

பணம்💰 எங்கே செல்கிறது???#அறிவோம்_அரசாங்கம்

INCOME TAX RAID..சிவாஜி The boss என்னும் சங்கரின் படைப்பிற்குபின் என்னை போன்றவர்களின் மத்தியில் பரீட்சையமான சொல்😋..தொழில் அதிபர்களுக்கும்💰😎அரசியல்வா(வியா)திகளுக்குமான😣 களம் என்று வியக்கும்😱வண்ணம்..நாம் கனவுகூட💭 காண முடியாத அளவிற்கு கணக்கில்காட்டபடாத காசு💸..

கடமையென்பதை மறந்து”வாங்குற காசுல பாதி வரிக்கே போவுது” என்று வசைபாடி😣 வரிகட்டுபவன் உத்தமனாய்..உயர்ந்தோனாய்பார்க்கபடும் நிலைக்கு நம்மை இழுத்துவந்துவிட்ட பெருமை என்னவோ.. வஞ்சத்துடன்😏 வாஞ்சைக்கடிமையாகி😵 வாங்கி பதுக்கும் பணப்பேய்களுக்குதான்..👹

    இப்படி வியப்பின்😱 விளிம்பில் என்னை அவ்வப்போது நிறுத்திவிட்டுச்🚶 செல்லும் மலையளவு🌄 கடலளவு🌅 பணமும் 💰சொத்தும்💿💱💲..இந்தியாவின்🇮🇳வறுமையில்😥 வற்றிய இரைப்பைகளுக்கு😷உணவாக்கபடாத😯காசும்💸 காகிதமும்📃📄📜..எங்கு செல்கிறது..??❓❓❓

வருமான வரி💲 சோதனைக்கு🔍பின் என்னநடக்கும்??#அறிவோம்_அரசாங்கம் 

💸💰.. பணம் கைபற்றப்படும் இடத்திற்கு ஏற்ப இருவேறு இடங்களில் ஒப்படைக்கப்படும்..

$💰தேர்தல் நேரங்களில் பிடிபடும் பணம்..அந்நேரங்களில் வண்டியில் கொண்டு செல்லும் போது பிடிபடும் பணம்..இவை மாநில கருவூலத்தில்🏣 ஒப்படைக்கப்படும்

$💰அவ்வாறன்றி..வீடுகளில்🏡..நிறுவனங்களில்🏤 பறிமுதல் செய்யப்படும் சொத்துக்கள்..இந்திய ரிசர்வ் வங்கியின்🏦 லாக்கரில் வைக்கப்படும்.

பறிமுதல் செய்யப்பட்ட உடன்..

முதல்படி☝: இரண்டு👬சாட்சிகளை முன்கொண்டு பணம்💸மற்றும் இதரசொத்துக்கள்💱சரிபார்க்கப்படும்..(சாட்சிகள் குறிப்பிட்ட சோதனைக்குரியவராகவும் இருக்கலாம்..அல்லது வருமானவரிதுறையினராகவும் இருக்கலாம்)

இரண்டாம்படி✌: பின் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள்📜மற்றும் பணம்💸 பெட்டியில்📥வைத்து சீல் வைக்கப்பட்டு📦கையெழுத்து✍ இடப்படும்..

☝: தங்க நகைகள்👑இந்திய ரிசர்வ் வங்கியிலோ🏦..வருமானவரித்துறை அலுவலகத்திலோ🏢 வைக்கப்படும்.(அதிக அளவில்😱 பறிமுதல் செய்யப்பட்டால் ரிசர்வ் வங்கி லாக்கருக்கு🏦மாற்றப்படும்..இல்லையெனில் வருமானவரித்துறை லாக்கரில்🏢 வைக்கப்படும் ..வழக்கிற்கேற்ப மாறுபடும்)

✌ :சொத்துவிவர பத்திரங்கள்📜அனைத்தும் வருமான வரிதுறையிலேயே🏢வைக்கப்படும்.

இறுதியில் இரண்டுசாவிகள்🔑🔑 வழங்கப்படும்..

☝🔑வருமானவரித்துறையிடமும்.. ✌🔑சம்பந்தப்பட்ட குற்றவாளியிடமும்.. 

    திருடன் கையில் நுழைக்க இயலா சாவியைக் கொடுத்து சொத்துக்கள் முடக்கப்படுவது போலத்தான் இங்கேயும்..😉

    #அறிவோம்_அரசாங்கம்

     #அரசியல்பபழகு