ஆம்..அவன் என் மகன்தான்.

தொப்புள்கொடி அறுத்தெறியும் அந்த வேளையில்..

அவன் அருகில் நான் இல்லை..

அரிய பல மொழி பேசி எம்மழலை வளர்கையில்..

அகரம் கற்பிக்க நான் இல்லை..

மண்ணோடு கல்லும் சேர்த்து தின்னுகையில் திட்டி அடிக்க நான் இல்லை..

விரல் சுவைத்து வெளிர்க்கையில் வேப்பெண்ணை கூட தடவவில்லை..

மூக்கின் வழி அழகு அருவி ஒன்று ஓடி வருகையில்.. முந்தானை கொண்டு துடைக்கவும் நான் இல்லை..

ஐந்தில் வளைக்காவிட்டால் வாழ்வு வாட்டியல்லவா எடுத்துவிடும் எம்மகனை..

பதைபதைப்பில்..

“நேர்மையும் உழைப்புமே உன்னை உச்சிக்கு கொண்டு செல்லும்” என

உபதேசித்து உச்சிமுத்தமும் இட வில்லை…

அன்றொருநாள் ..

அக்கா என்ற உறவாய் நீ இரு என்றாய்..

அ1 வகுப்பின் ஆறாவது பலகையில் ..

அரங்கேறியது நம் உறவு..

சின்ன சின்ன செய்கைகளிலும் என் சிரிப்பை மட்டும் எதிர்நோக்கி “நீ

நட்பில்லை உறவில்லை ஒண்ணுவிட்ட அத்தை மகன் கூட இல்லை..

இந்த உணர்வின் உறவெது என்ற வியப்பில் “நான்

உடல் கிழித்து உதிரம் அளந்து பாசம் கணக்கிட்ட நாட்கள் அவை..

சில நாட்கள் போன் பேசி ..

பல நாட்கள் போரும் பேசியது.. நம்வாழ்வில்..

நல்ல பல சொந்தங்கள் வந்தும் இருந்தும் நகர்ந்தும் வாழ்க்கை கற்பித்தது..

கற்பித்த பாடமது மனதில் பதிந்தேபோக..

உலகின் உட்பொருள் அறிந்து ஒன்றும் பேசா கல்லாய் மாறிய நான்..

மழலையாய் மறைவின்றி காயம்மறந்து “உண்மை“யில் களித்து அவ்வபோது உயிர் பிறக்கிறேன்…உன்னிடம்..

உலர்ந்து போன உயிரையும் உன்னத அன்பில் திளைக்க வைத்த உன்னை ஒருத்தி ஏய்த்தே செல்ல..

எல்லா பொறுப்பையும் மீறி பெரும் கடமை தோள்களின் மேலே.. “இருபது வயது பிள்ளைக்கு தாயாய் நான்”

இனியும் இவன் வாழ்வில்.. நாணளவு துன்பமோ..நூலளவு ஏமாற்றமோ..

என்னை மீறித்தான் துளைத்துவிடமுடியும்.. நிதர்சனந்தான்..

முந்நூறு நாட்கள் மூலகருவினில் வைத்து உருவாக்கவில்லை.. செந்நீர் கரைத்து அமிர்தமாக்கி பாலூட்டவும் இல்லை..

ஆனால்..

வாழ்வின் உயரம் நோக்கி துயரம் போக்கி சிகரம் தொட.. அயரா ஏணியாய்..என்றும் “நான்தான்

ஆம் ..அவன் என் மகன்தான்.

கவிஞர்.மகிழ் ( ‘முதன் முதலாய்’ என் கவிநடை மாற்றி..அரசியல்தாண்டி அன்பிற்காக ஒரு படைப்பு)

Advertisements

Author: மகிழ்😊..

wanna die only as an IAS OFFICER..🙌 #அரசியல்பழகு பல வேடிக்கை மனிதரைப்போலே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ..😎😎

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s